இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு, நடனமாடுதல், முடி திருத்துதல், சமையல் செய்தல் எனப் பல வேலைகளைச் செய்து நேரத்தைக் கடத்திவருகின்றனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சில தினங்களுக்கு முன்பு சிவாஜி ரஜினி ஸ்டைலில் மொட்டை தலையுடன், கறுப்புக் கண்ணாடி, கறுப்பு பிளேஸர் என மாஸான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இணையத்தை அலறவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் நேரலையில் பேசிய கபில்தேவ், "என்னுடைய ஹீரோக்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், மகேந்திர சிங் தோனி இருவரையும் பின்தொடர்ந்தே நான் இந்தப் புதிய லுக்கிற்கு மாறியுள்ளேன்.
விவியனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன், அதேபோல் தோனி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதும் தனது முடியை எடுத்துவிட்டார். அப்போதே நாம் ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்று தோன்றியது, இருப்பினும் தற்போதுதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.
-
Thalaivar @therealkapildev follows Sir @ivivianrichards' beardo and #Thala @msdhoni's hairdo! #WhistlePodu VC: @vikrantgupta73 🦁💛 pic.twitter.com/XxzH7FWBt5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thalaivar @therealkapildev follows Sir @ivivianrichards' beardo and #Thala @msdhoni's hairdo! #WhistlePodu VC: @vikrantgupta73 🦁💛 pic.twitter.com/XxzH7FWBt5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2020Thalaivar @therealkapildev follows Sir @ivivianrichards' beardo and #Thala @msdhoni's hairdo! #WhistlePodu VC: @vikrantgupta73 🦁💛 pic.twitter.com/XxzH7FWBt5
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2020
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் புதிய புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக்கோப்பை பதக்கத்தைத் தேடும் ஆர்ச்சர்!