கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இம்மாத இறுதிவரை 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில், கோவிட் -19 வைரசால் கொல்கத்தாவில் இப்படி ஒரு நிலை வரும் என தான் கனவிலும் நினைத்ததில்லை என பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சொந்த ஊரை இப்படி பார்ப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். கூடிய விரைவில் இந்த நிலைமை மாறும்" என குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, கொல்கத்தா சாலையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
-
Never thought would see my city like this .. stay safe .. this will change soon for the better ...love and affection to all .. pic.twitter.com/hrcW8CYxqn
— Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Never thought would see my city like this .. stay safe .. this will change soon for the better ...love and affection to all .. pic.twitter.com/hrcW8CYxqn
— Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020Never thought would see my city like this .. stay safe .. this will change soon for the better ...love and affection to all .. pic.twitter.com/hrcW8CYxqn
— Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020
இந்தியாவில் இதுவரை இந்த கோவிட் -19 வைரசால் இந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஒருவர் கோவிட் -19 வைரசால் உயிரிழந்துள்ளார். ஏழு பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, கோவிட் -19 வைரசால் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'சிஎஸ்கேவின் வெற்றிக்கு தோனிதான் காரணம்' - மனம் திறந்ச அல்பி மோர்கல்