ETV Bharat / sports

உஷாரய்யா.. உஷாரு..! - எதிரணி பேட்ஸ்மேனுக்கு ஐசிசி அலார்ட்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், சரியான தருணத்தில் இந்திய வீரர் தோனியின் விக்கெட் கீப்பிங் செயலை ஐசிசி வெகுவாக பாராட்டியுள்ளது.

Dhoni enjoys James Neesham wicket with his teamates
author img

By

Published : Feb 4, 2019, 8:14 PM IST

இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வெலிங்டனில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில், இந்திய வீரர்கள் அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக ஆடினாலும், விக்கெட் கீப்பிங்கில் தோனியின் சமயோஜித்த புத்தி தான் தற்போது இணையதளத்தில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.

253 ரன் இலக்குடன் இரண்டாவது பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் ஜெம்ஸ் நீஷம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார்.

நீஷம் 32 பந்தில் 4 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் உட்பட 44 ரன்களை எடுத்து செட் பேட்ஸ்மேன் ஆக இருந்தபோது, தான் தோனியின் விக்கெட் கீப்பிங் மேஜிக் நிகழ்ந்தது. ஆட்டத்தின் 37-வது ஓவரின் இரண்டாவது பந்தை இந்திய வீரர் கேதர் ஜாதவ் வீசிய பந்தை க்ரீஸில் இருந்த நீஷம் ஸ்வீப் ஷாட் முயற்சித்தார். பந்து நீஷம் காலில் பட்டதால் கேதர் ஜாதவ் நடுவரிடம் எல்பிடபிள்யூ கேட்டார்.

அப்போது பந்து தோனியின் அருகே இருந்ததை கண்டு நீஷம் முதலில் ரன் எடுக்க முயற்சித்தார். க்ரீஸில் இருந்து இரண்டு ஸ்டெப் தான் எடுத்து வைத்ததை நோட் செய்த தோனி சட்டென்று பந்தை எடுத்து நீஷம் க்ரீஸுக்கு வருவதற்கு முன் அவரை ரன் அவுட் செய்து அசத்தினார். இதை பார்த்த நீஷம் ஒன்னும் புரியாமல் பவுலியனுக்கு நடையை கட்டினார்.

undefined

இந்த விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் தோனி துள்ளி குதித்து கேதர் ஜாதவுடன் கொண்டாடினார். தோனியின் இந்த அட்டகாசமான ரன் அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இந்திய அணியை வெற்றிபெற செய்தது. தோனியின் இந்த மேஜிக் ரன் அவுட்டை ஐசிசி பாராட்டி டிவிட் செய்துள்ளது. அதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் க்ரீஸை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எதிரிணயின் பேட்ஸ்மேனுக்கு அட்வைஸ் செய்தது.

இந்த டிவிட்டை பார்த்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், அட்வைஸ் தந்ததற்கு நன்றி, அடுத்த முறை பந்து எங்கு இருக்கிறது என்ற பார்த்த பிறகு தான் ஒட வேண்டும் என பதிலளித்தார். இந்த போட்டியில் தோனி ஒரு ரன் எடுத்து பேட்டிங்கில் ஏமாற்றினாலும், விக்கெட்கீப்பிங்கில் தான் எப்போதும் கில்லி என மீண்டும் நிருபித்து காட்டியுள்ளார்.

Intro:Body:

pudhuchery cancer rally

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.