ETV Bharat / sports

‘ நடராஜன் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் ஊருக்கே பெருமை’ - தாயார் பெருமிதம் - Ind vs aus

ஆஸ்திரேலியா அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக நடராஜன் தங்கராசு விளையாடுவது எங்கள் ஊருக்கே கிடைத்த பெருமை என நடராஜனின் தாயார் சாந்தா கூறியுள்ளார்.

natarajan-playing-in-the-indian-team-is-an-honor-for-our-town-natarajans-mother-is-proud

author img

By

Published : Dec 2, 2020, 5:53 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தங்கராசு அறிமுக வீரராக களமிறங்கினார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்தது. இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றியடைந்தது.

இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் தங்கராசு, ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே, ஆஸ்டன் அகர் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியிலுள்ள நடராஜனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்திய அணிக்காக நடராஜன் விளையாடுவதை தொலைக்காட்சி வழியாக உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து நடராஜனின் தாயார் சாந்தா கூறுகையில்,“ என் மகன் இந்திய அணிக்காக விளையாடி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிலும் அவன் முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது எங்களுக்கும், எங்கள் ஊருக்கும் மிகுந்த பெருமையைத் தந்துள்ளது. அவன பல போட்டிகளில் விளையாடி நாட்டிற்கு பெருமைச்சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

‘ நடராஜன் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் ஊருக்கே பெருமை’

நடராஜன் குறித்து சின்னப்பம்பட்டி மக்கள் கூறுகையில், “நடராஜன் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து அவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்று பெருமைச்சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி சிறுவர்கள் கூறுகையில்,“நடராஜன் அண்ணன் எங்க ஊரிலிருந்து இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்பதற்கு மகிழ்ச்சியாகவுள்ளது. நாங்களும் அவரைப்போல கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி, தேசிய அணிக்கு தேர்வாக வேண்டும் என்பதே எங்களது லட்சியம்” என்று தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தனது முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய நடராஜன் தங்கராசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மாலன் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை 'ஒயிட் வாஷ்' செய்த இங்கிலாந்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.