இத்தாலியில் 2019-20 சீசனுக்கான சீரி ஏ கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நபோலியில் சான் பாவ்லோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நபோலி அணி, போலோக்னா அணியுடன் மோதியது. இதில், 41ஆவது நிமிடத்தில் நபோலி வீரர் ஃபெர்னான்டோ லோரன்டி கோல் அடித்து அசத்தினார். அதன்பின், நடைபெற்ற இரண்டாம் பாதியில் போலோக்னா அணி அட்டாக்கிங் முறையில் விளையாடியது.
இதன் பலனாக, 58ஆவது நிமிடத்தில் ஆண்ட்ரியாஸ் ஸ்கோவ் (Andreas Skov) லாவகமாக கோல் அடித்தார். அதன்பின், ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கையில், 80ஆவது நிமிடத்தில் நபோலி அணி டிஃபெண்டிங் லைனை எளிதாகக் கடந்து போலோக்னா வீரர் நிகோலா சன்சோனே அசத்தலான கோல் அடித்தார். இதனால், போலோக்னா 2-1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், போலோக்னா அணி விளையாடிய 14 போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு டிரா, ஆறு தோல்வி என 16 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், நபோலி அணி ஐந்து வெற்றி, ஐந்து டிரா, நான்கு தோல்வி என 20 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஐஸ் ஹாக்கி போட்டியில் ஒரு கோலுக்கு 45 ஆயிரம் கரடி பொம்மைகள் பரிசு!