வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி தற்போது ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
இதில், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் அதிரடியாக விளையாடி சதமடித்ததன் மூலம், ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 295 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்.
அதனையடுத்து, களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக், முஸ்பிகூர் ரஹிம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் மொமினுல் ஹாக் சர்வதேச டெஸ்டில் தனது ஒன்பதாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து முஷ்பிகூர் ரஹிமும் தனது எட்டாவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்தார்.
![வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6189178_mo.jpg)
அதனையடுத்து மொமினுல் ஹாஜ் 132 ரன்கள் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த முஷ்பிகூர் ரஹிம் சர்வதே டெஸ்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து சாதனைப் படைத்தார். மேலும் இதனால் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தகாரரானார். இதன்மூலம் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 560 ரன்களைச் சேர்ந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹிம் 203 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
![இரட்டைசதமடித்து அசத்திய ரஹிம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6189178_rah.jpg)
பின்னர் 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பிரின்ஸ் ரன் ஏதுமெடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டொனால்ட் டிரிபனோவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
![முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நயீம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6189178_wi.jpg)
இதனால் ஜிம்பாப்வே அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒன்பது ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை ஜிம்பாப்வே அணி தொடரவுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்துக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!