#INDvsRSA: இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
மேலும் இந்த போட்டியில் பல்வேறு புதிய சாதனைகளும் படைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த டெஸ்ட் போட்டியாக, ஒரு சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் மொத்தம் 37 சிக்சர்கள் பறந்ததின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டியாக தற்போது இந்தப் போட்டியானது மாறியுள்ளது.
இதற்கு முன் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே இதுநாள் வரை ஒரு டெஸ்ட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாக இருந்து வந்தது.
ஒரு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள்:
- 2019/20- இந்தியா - தென் ஆப்பிரிக்கா - 37 சிக்சர்கள்
- 2014/15- பாகிஸ்தான் - நியூசிலாந்து - 35 சிக்சர்கள்
- 2005/06- பாகிஸ்தான் - இந்தியா - 27 சிக்சர்கள்
- 2013/14- வங்கதேசம் - நியூசிலாந்து - 27 சிக்சர்கள்
இதையும் படிங்க: 'பாசப் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 6 யானைகள்'