நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 22) நேப்பியரில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
செஃபெர்ட் மீண்டும் அசத்தல்
இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்தில் - டிம் செஃபெர்ட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் கப்தில் 19 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செஃபெர்டும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கியே கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
கான்வே அரைசதம்
அதன்பின் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கான்வே - பிலீப்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த பிலீப்ஸ் 31 ரன்களிலும், கான்வே 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிரடி ஆட்டத்தில் முகமது ரிஸ்வான்
இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஸ்வான் அரைசதத்தையும் கடந்தார்.
-
Finished it in style 🙌#NZvPAK #HarHaalMainCricket #BackTheBoysInGreen pic.twitter.com/1gLAORJIy1
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Finished it in style 🙌#NZvPAK #HarHaalMainCricket #BackTheBoysInGreen pic.twitter.com/1gLAORJIy1
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020Finished it in style 🙌#NZvPAK #HarHaalMainCricket #BackTheBoysInGreen pic.twitter.com/1gLAORJIy1
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020
அவருடன் மறுமுனையில் நிலைத்து ஆடிய முகமது ஹபீஸும் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அணிக்கு உதவினார். பின்னர் முகமது ஹபீஸ் 41 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 89 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதியாக பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
-
Match Summary
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Pakistan win by 4 wickets!
Scorecard: https://t.co/ngjFOdbxyP#NZvPAK | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/EjCttwBcgt
">Match Summary
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020
Pakistan win by 4 wickets!
Scorecard: https://t.co/ngjFOdbxyP#NZvPAK | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/EjCttwBcgtMatch Summary
— Pakistan Cricket (@TheRealPCB) December 22, 2020
Pakistan win by 4 wickets!
Scorecard: https://t.co/ngjFOdbxyP#NZvPAK | #HarHaalMainCricket | #BackTheBoysInGreen pic.twitter.com/EjCttwBcgt
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி போட்டி பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய முகம்து ரிஸ்வான் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் அசத்திய நியூசிலாந்தின் டிம் செஃபெர்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:கரோனா விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னா கைது!