பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 2020-22 சீசனுக்கான 18 வீரர்கள் கொண்ட வீரர்களின் ஒப்பந்த பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் புதுமுக வீரர்களான நசிம் ஷா, இஃப்திகார் அகமது ஆகியோர் இடம்பெற்றனர். வேகபந்துவீச்சாளர்களான வஹாப் ரியாஸ், முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் இந்த பட்டியலில்லிருந்து நீக்கப்பட்டனர்.
கடந்த 12 மாதங்களில் இவர்களது ஆட்டத்திறன் மோசமாக இருந்ததால்தான் இவர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடற்தகுதி தொடர்பாக அணியின் வீரர்களுக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்கியது.
ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் இந்த வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும், வஹாப் ரியாஸ் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். முகமது ஆமிர் இறுதியாக கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். ஹசன் அலி கடந்தாண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தற்கால வாசிம் அக்ரமை மிஸ் செய்தது டெஸ்ட் கிரிக்கெட்