மாலத்தீவு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று இ்ந்திய பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகமது சாலிஹை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தீவிர கிரிகெட் ரசிகரான மாலத்தீவு அதிபருக்கு உலகக் கோப்பையில் ஆடும் இந்திய கிரிகெட் அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை அன்பளிப்பாக வழங்கினார் பிரதமர் மோடி. இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
அதற்கு இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். "உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நேரத்தில் தற்போது கிரிக்கெட்டை விளம்பரப்படுத்திய மோடிக்கு நன்றி. விரைவில் மாலத்தீவில் கிரிக்கெட்டை பார்க்க ஆர்வமாக உள்ளேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாலத்தீவு விளையாட்டுத் துறை அமைச்சர் அஹம்து மஹ்லூப், ஆப்கனிஸ்தானிற்கு உதவி செய்து அந்நாட்டில் கிரிக்கெட்டை வளர்த்தது போல மாலத்தீவுக்கும் பி.சி.சி.ஐ உதவி செய்யும் என நம்பிக்கை இருப்பதாக கூறினார்.