ETV Bharat / sports

ஓய்வு முடிவு ஏன்?... என்ன சொல்கிறார் சாதனை நாயகி மித்தாலி?

author img

By

Published : Sep 3, 2019, 6:38 PM IST

இதற்கு அப்போதைய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும், மித்தாலி ராஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என கூறப்பட்டது. அதிலிருந்தே, மித்தாலி ராஜ் டி20 போட்டிகளிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின.

மித்தாலி ராஜ்

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் இன்று அறிவித்துள்ளார். ஏன் ஓய்வு முடிவை எடுத்தார், அதற்கான காரணம் என்ன என்பதை காண்போம்...

கிரிக்கெட் உலகின் ’பெண் சச்சின்’

22 யார்டுக்குள் கடந்த 20 ஆண்டுகளாக, கிரிக்கெட் விளையாடும் மித்தாலி ராஜ், ரசிகர்களால் கிரிக்கெட் உலகின் ‘பெண் சச்சின்’ என்று அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். 17 வயதில் இந்தியாவிற்காக ஆட வந்த மித்தாலி ராஜ், தன் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (6, 000 ரன்கள்) அடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

அபாயகரமான வீராங்கனை

அதிக அரைசதங்கள், தொடர்ச்சியான ஏழு அரைசதங்கள் அடித்தவர் போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், ‘ அபாயகரமான கிரிக்கெட் வீராங்கனை’ என வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்பட்டார். இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகள் செய்த மித்தாலிக்கு 2013ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி இந்திய அரசு கௌவரப்படுத்தியது. சர்வதேச அளவில் 200 ஒருநாள் தொடரில் ஆடிய ஒரே வீராங்கனையும் இவரே.

கேப்டன்சிப்பிலும் கலக்கிய மித்தாலி

இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரரான இவர், தன்னுடைய கேப்டன்சியிலும் சர்வதேச அளவில் இந்திய அணியின் தரத்தை உயர்த்திக் காட்டினார். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில், இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். 2006ஆம் ஆண்டு இவரது தலைமையில்தான் இந்திய அணி முதல்முதலாக சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கியது.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

இதைத் தொடர்ந்து, 2012, 2014, 2016 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 89 டி20 போட்டிகளில் விளையாடிய மித்தாலி ராஜ், 2,364 ரன்கள் எடுத்து, இந்திய அளவில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த சூழலில், டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி அணியில் மற்றொரு வீராங்கனையாக விளையாடினார், ஆனால் ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் கேப்டனாக உள்ளார்.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

கேப்டனுக்கு வந்த சோதனை

இதற்கிடையே, சென்ற ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்றது. அப்போது, லீக் போட்டியில் மித்தாலி ராஜ் சிறப்பாக விளையாடிய போதிலும், அவரை இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் களமிறக்காமல் இருந்தனர். மேலும், அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றும் போனது.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

இதற்கு அப்போதைய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கும், மித்தாலி ராஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என கூறப்பட்டது. அதிலிருந்தே, மித்தாலி ராஜ் டி20 போட்டிகளிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், மித்தாலி ராஜ் டி20 அணியில் தொடர்ந்தார். அவர் கடைசியாக, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டியில் விளையாடினார்.

என்ன சொல்கிறார் மித்தாலி ராஜ்

இந்நிலையில், இன்று திடீரென சர்வதேச டி20 போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராவதற்காக, டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். இந்திய அணியின் கேப்டனாக நம் நாட்டுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது கனவு.

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

என்னை டி20 போட்டிகளில் விளையாட ஊக்குவித்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், வெற்றியடைய இந்திய டி20 அணிக்கு எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Intro:Body:

#MithaliRaj

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.