கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சம் காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் அதிக முறைச் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின், அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், தற்போதுள்ள தனது மனநிலையைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், ”நான் மன ரீதியாக வான்கடே மைதானத்திலும், உடல் ரீதியாக வீட்டிலும் உள்ளேன். இதுவும் கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார்.
-
Mentally at Wankhede stadium. But physically at home. This too shall pass. #stayhome #staysafe pic.twitter.com/EBsjgqtmVB
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mentally at Wankhede stadium. But physically at home. This too shall pass. #stayhome #staysafe pic.twitter.com/EBsjgqtmVB
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 29, 2020Mentally at Wankhede stadium. But physically at home. This too shall pass. #stayhome #staysafe pic.twitter.com/EBsjgqtmVB
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 29, 2020
கோவிட்-19 பெருந்தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பல்வேறு துறை பிரபலங்களும் தங்களைத் தாங்களே வீடுகளில் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோபி பிரைன்ட் துண்டிற்கு இவ்வளவு மதிப்பா? - வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்