இந்த ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 37ஆவது லீக் போட்டியில் டிபெண்டிங் சாம்பியன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து சிட்னி தண்டர்ஸ் மோதியது.
இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி கேப்டன் கிறிஸ்டியன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் அந்த அணியின் சாம் ஹார்பர் 52 ரன்களும், மார்ஷ் 47 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணியின் பேட்டிங்கின் ஆறாவது ஓவரின்போது 30 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதையடுத்து சிட்னி அணிக்கு 14 ஓவர்களில் 135 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ராஸ் 51 ரன்களும், அலெஸ் ஹேல்ஸ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். தண்டர்ஸ் அணி 14 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி டி/எல் (டக்வொர்த் லூயிஸ்) விதிமுறைப்படி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கடந்த சீசனின் டிபெண்டிங் சாம்பியனான ரெனிகேட்ஸ் அணி இந்தத் தொடரில் தொடர்ந்து 9 தோல்விகளை சந்தித்த நிலையில், இந்தப் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க விருப்பம் - டி வில்லியர்ஸ் ஓபன் டாக்