இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் தொடர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்துவந்தார். பல நாள்களுக்கு பிறகு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றபோதும், மீண்டும் காயம் காரணமாக விலகினார்.
இதையடுத்து இவரை பரிசோதனை செய்து பார்க்கையில் ஹெர்னியா இருப்பது தெரியவந்தது. இந்தப் பிரச்னை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியவர, புவனேஷ்வர் குமாரை லண்டனுக்கு அனுப்பி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட ஹெர்னியா பிரச்னைக்கு லண்டனில் ஜனவரி 11ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருடன் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் இருக்கிறார். புவனேஷ்வர் குமார் விரைவில் இந்தியா திரும்பியபின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கவுள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியின் 87 வயது ரசிகை காலமானார் - பிசிசிஐ இரங்கல்