கோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றால் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு ஏப்ரல் 4ஆம் தேதிவரை நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் குறைக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே அடைந்துள்ளனர். இந்தத் தருணத்தில், தான் எவ்வாறு நேரத்தை செலவழித்துவருகிறேன் என்பது குறித்து வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டன் தமிம் இக்பால் தனியார் விளையாட்டு இணையதளத்தில் பேசியுள்ளார்.
அதில், ”கரோனா வைரஸால் வங்கதேசம் முடங்கியுள்ளது. இந்த நேரத்தில் அதிர்ஷடவசமாக என்னிடம் டிரெட்மில் இருப்பதால் காலையில் நான் உடற்பயிற்சி மேற்கொள்வேன். அதன்பின் மாலையில் எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பேன். இந்த கோவிட் -19 வைரஸால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. நாம் ஒரு நாடாக ஒன்றுசேர்ந்தால் இதில் இருந்து நிச்சயம் மீண்டுவர முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வாய்ப்புகள் கிடைக்காது நாம் தான் உருவாக்க வேண்டும் - 26 ஆண்டுகளுக்கு முன் சச்சின் செய்த மேஜிக்