இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களாக இருப்பவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா. தற்போது குர்னால் பாண்டிய சயீத் முஷ்டாக் அலி தொடருக்காக பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
![தந்தையுடன் குர்னால் பாண்டியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/download_1601newsroom_1610770194_243.jpg)
இந்நிலையில், இவர்களது தந்தை ஹிமான்ஷு இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து குர்னால் பாண்டியா பிசிசிஐயின் கரோனா பாதுகாப்பு சூழலை மீறி தனது தந்தையை காணச் சென்றுள்ளார்.
![தந்தையுடன் ஹர்திக் பாண்டியா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1547198455-hardik-pandya-father-twitter_1601newsroom_1610770194_103.jpg)
இதுகுறித்து பரோடா அணியின் தலைமை நிர்வாக அலுவலர் ஷிஷிர் ஹட்டங்கடி கூறுகையில், "குர்னால் பாண்டியா தனது தந்தை இறந்த செய்தியறிந்து பிசிசிஐயின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை தவிர்த்துள்ளார். அவர் செய்தது தவறாக இருப்பினும், இது அவருக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் சோகம். ஹர்த்திக் மற்றும் குர்னால் பாண்டியாவின் தந்தை இறப்பிற்கு பரோடா கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற தென் ஆப்பிரிக்க அணி!