இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் வலம் வந்தவர் கெவின் பீட்டர்சன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல், பிக் பேஷ் போன்ற தொடர்களில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து தீவிர பிரசாரத்திலும் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொலியில், "இந்த ட்வீட்டில் நான் ஒரு மனுவை இணைத்துள்ளேன். தயவு செய்து அதில் நீங்கள் கையெழுத்திட முடியுமா? இதன் மூலம் நாங்கள் சட்டவிரோத வன விலங்கு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். எப்படியாவது, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை நிறுத்துவதை உறுதி செய்ய அரசாங்கங்களை நாங்கள் கட்டாயப்படுத்த வேண்டும். இதனால் பல்வேறு வன விலங்குகளின் உயிரையும் உங்களால் காப்பாற்ற முடியும். தயவுசெய்து இந்த மனுவில் கையெழுத்திடுங்கள்" என்று கேட்டுள்ளார்.
-
PLEASE?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
— Kevin Pietersen🦏 (@KP24) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
PLEASE RT?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻https://t.co/I1k8LO2JKd pic.twitter.com/OB48UdXRFf
">PLEASE?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
— Kevin Pietersen🦏 (@KP24) April 21, 2020
PLEASE RT?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻https://t.co/I1k8LO2JKd pic.twitter.com/OB48UdXRFfPLEASE?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
— Kevin Pietersen🦏 (@KP24) April 21, 2020
PLEASE RT?!?!?! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻https://t.co/I1k8LO2JKd pic.twitter.com/OB48UdXRFf
கடந்த மார்ச் மாதம் காண்டாமிருகங்களின் நிலை குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு ஆவணப்படமெடுக்க இந்தியாவிலுள்ள அஸ்ஸாமிற்கு பீட்டர்சன் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸுக்கு மத்தியில் கால்பந்து திறமையை வெளிப்படுத்தும் க்ளூவர்ட்!