ETV Bharat / sports

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல்: ராகுல், விராட் அசத்தல்; ரோகித் பின்னடைவு!

author img

By

Published : Dec 12, 2019, 6:11 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுன் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியளில் டாப் 10 இடங்களுக்குள் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

Kohli, Rahul move upwards in T20I rankings; Rohit slips down

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நேற்று இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கே.எல். ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். ஆனால், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஒரு இடம் பின் தங்கி, 9ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KL Rahul ⬆️
Virat Kohli ⬆️

After their 💥 performances against West Indies, the Indian duo have risen in the @MRFWorldwide ICC T20I Rankings for batting.

Updated rankings ▶️ https://t.co/EdMBslOYFe pic.twitter.com/90fnJGtksp

— ICC (@ICC) December 12, 2019 ">

அதேபோல், டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்களின்றி ஆப்கானிஸ்தான் அணியின் ராஷித் கான் முதலிடத்தில் நீடித்து வருகிறார். மேலும் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலிலும் மாற்றம் ஏதுமின்றி ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மூன்றாவது டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, நேற்று இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கே.எல். ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். ஆனால், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஒரு இடம் பின் தங்கி, 9ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்களின்றி ஆப்கானிஸ்தான் அணியின் ராஷித் கான் முதலிடத்தில் நீடித்து வருகிறார். மேலும் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலிலும் மாற்றம் ஏதுமின்றி ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மூன்றாவது டி20: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

Intro:Body:

Kohli, Rahul move upwards in T20I rankings; Rohit slips down

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.