ETV Bharat / sports

இது கோலியின் ஆண்டு - ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் - virat kohli in 2019

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்.

விராட் கோலி, virat kohli
விராட் கோலி, virat kohli
author img

By

Published : Dec 24, 2019, 6:41 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 17 புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.

விராட் கோலி, virat kohli
ஸ்மித்

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்யசன், இந்தியாவின் புஜாரா, ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசக்னே ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.

இவர்கள் தவிர்த்து கராச்சியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதனால் ஆறாவது இடத்திலிருந்த இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே, ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ரஹானேவுக்கு அடுத்தடுத்த இடங்களில் வார்னர் (ஆஸி.), ஜோ ரூட் (இங்கி.), ராஸ் டெய்லர் (நியூசி.) ஆகியோர் உள்ளனர்.

விராட் கோலி, virat kohli
கோலி, ரஹானே

இது தவிர முதல் இருபது இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த மயாங்க் அகர்வால் (12ஆவது இடம்), ரோஹித் சர்மா (15ஆவது இடம்) ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் அணிகளின் பட்டியலில் இந்திய அணியே முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, வரிசையாக வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் அபார வெற்றியை பதிவு செய்து 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

விராட் கோலி, virat kohli
இந்திய அணி

இது தவிர்த்து ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ள கோலி, இந்தாண்டில் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன்கள் (44 போட்டிகளில் 2,455 ரன்கள்) எடுத்த வீரர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததுதான் ஒரே வருத்தம் - கோலி

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/kohli-maintains-top-spot-rahane-slips-to-7th-in-test-rankings/na20191224163301564

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.