யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற தலைப்பு, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் அதிகம் உபயோகப்படுத்திய பெயர் விராட் கோலி - பாபர் ஆசாம் ஆவர்.
ஏனெனில் இந்திய அணியின் விராட் கோலி, கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளை தனது அதிரடி ஆட்டத்தினால் தவிடுபொடியாக்கிவர். அதேசமயம் இளம் வீரரான பாபர் ஆசாம், கோலியைப் போன்றே பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். இதன் காரணமாகவே தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலியா அல்லது ஆசாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இக்கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நானும் விராட் கோலியும் ஒன்றல்ல. இருவரும் இருவேறு யுக்தியை கையாள்பவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆசாம், என்னைப் பொறுத்த வரையில் என்னையும் கோலியையும் இணைத்து பேசுவது சரியல்ல. ஏனெனில் நாங்கள் இருவரும் எங்களுக்கு ஏற்றவாறு இவ்விளையாட்டை விளையாடி வருகிறோம். மேலும் நான் விளையாடுவது எனது அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, யாருடனும் ஒப்பிடுவதற்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தற்போது கோலியை விட பாபரே சிறந்தவர் - அடில் ரஷித்!