இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை இந்திய அணி வெற்றி அல்லது டிராவில் முடிக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
இதன் காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. வீரர்கள் பயிற்சி பெறும் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.
-
Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021Training ✅@Paytm #INDvENG pic.twitter.com/G7GCV1EA8U
— BCCI (@BCCI) March 1, 2021
மேலும், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு?