இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்கவுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 133 ரன்களை எடுத்தால், 12 ஆயிரம் ரன்களை வேகமாக அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சினின் சாதனையை முறியடிப்பார்.
12 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு 300 இன்னிங்ஸ்களை சச்சின் எடுத்துக்கொண்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் 314 இன்னிங்ஸ்களிலும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா 336 இன்னிங்ஸ்களிலும் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.
ஆனால் விராட் கோலி இதுவரை 239 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடி 11 ஆயிரத்து 867 ரன்களை எடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் தொடரை, இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நியூசிலாந்து தொடரில் ரன் குவிக்கத் திணறிய விராட் கோலி, இந்தத் தொடரில் ஃபார்முக்கு வருவாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வயசானாலும் இர்பான் பதானின் பேட்டிங்கும், முகமது கைஃபின் ஃபீல்டிங்கும் இன்னும் மாறவே இல்லை!