இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நடச்சித்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ராஜத் பாட்டியா. இவர், 1999ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறார்.
தமிழ்நாடு, உத்தரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநில அணிகளுக்காக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக டி-20 போட்டிகளில் அறிமுகமான பாட்டியா, 2012ஆம் ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
இதுவரை 165 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 137 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் 95 ஐபிஎல் டி20 போட்டிகளில் பங்கேற்று 345 ரங்களையும், 75 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கிய ராஜத் பாட்டியா, இன்று (ஜூலை29) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.