ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்டில் 'கிங்' கோலி படைத்த சாதனை - Virat Kohli record

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

'கிங் கோலி'
author img

By

Published : Aug 4, 2019, 9:45 AM IST

கிரிக்கெட்டில் மூடிசூடா மன்னாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்ந்துவருகிறார். ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வித போட்டிகளிலும் 50-க்கும் அதிகமாக பேட்டிங் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம்வருகிறார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

96 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணியில் கோலி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடங்கும். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் (224) என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால், இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷானின் (223) சாதனை முறியடிக்கப்பட்டது.

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிவருவதால் அனைவரின் கண்ணும் கோலியின் கேப்டன்ஷிப், பேட்டிங் மீதுதான் இருந்துவருகிறது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஃபுளோரிடாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.