தனியார் தொலைக்காட்சிக்காக காட்டு விலங்குகள் பற்றிய ஆவணப்படத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வீரர் கெவின் பீட்டர்சன் உருவாக்கி வருகிறார். அதற்காக இந்தியா வந்த கெவின் பீட்டர்சன் காண்டாமிருகங்கள் பற்றி காட்சிப்படுத்திவருகிறார்.
இந்த ஆவணப்படத்துக்காக இந்தியா வந்துள்ள பீட்டர்சன், அசாம் மாநிலம் காஸிரங்கா தேசியப் பூங்காவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு நடத்துவதற்காக அமைச்சர் பாரிமல், வனத்துறையினரைச் சந்தித்து அனுமதி வாங்கியுள்ளார்.
அவருடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில இயக்குநர்களும் இந்தியா வந்துள்ளனர். மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் பீட்டர்சன் மனஸ் தேசிய பூங்கா, போபிட்டோரா தேசிய பூங்கா ஆகியவற்றையும் பார்க்கவுள்ளார்.
-
Crew pic.twitter.com/IbFNS9K3ZI
— Kevin Pietersen🦏 (@KP24) March 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Crew pic.twitter.com/IbFNS9K3ZI
— Kevin Pietersen🦏 (@KP24) March 5, 2020Crew pic.twitter.com/IbFNS9K3ZI
— Kevin Pietersen🦏 (@KP24) March 5, 2020
இதையும் படிங்க: அரை மீசை, அரை தாடியுடன் காட்சியளிக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் - ஏன் தெரியுமா?