ETV Bharat / sports

பருந்தான ஊர்க்குருவி... ஷஃபாலி வர்மா...! - இந்தியா - ஆஸ்திரேலியா

சமீபத்தில் பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வர்மா வென்றிருந்தார். அதனைப் பார்த்த அவரது தந்தை சஞ்சீவ், ஆனந்த கண்ணீரோடு அமர்ந்திருந்தார். ஏனென்றால் 2013ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியவரிடம் ரூ.7.5 லட்சத்தை கொடுத்து ஏமாந்தபோதும், வீட்டில் வெறும் 280 ரூபாய் மட்டுமே பணம் இருந்தபோதும் ஷஃபாலியின் கிரிக்கெட் பயிற்சி என்றுமே பாதித்ததில்லை, ஷாஃபாலியின் தந்தை.

journey-from-haryana-to-australia-the-story-of-shafali-verma

author img

By

Published : Mar 7, 2020, 4:30 PM IST

Updated : Mar 7, 2020, 8:12 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 'யங் சென்சேஷன்' ஷஃபாலி வர்மா. இதுவரை இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு கிடைக்காத அளவிற்கு, இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பதைக் கடந்து, இந்திய மகளிர் வீராங்கனைகளின் வளர்ச்சியால் தான், இது சாத்தியமாகியுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் என சூப்பர் ஸ்டார்கள் பலர் இருந்தாலும், உலகக்கோப்பைத் தொடரில் களம் புகுந்த 16 வயதேயாகும் ராக் ஸ்டார் ஷஃபாலி வர்மாவின் ஆட்டம், சர்வதேச ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டின் ரசிகர்கள் ஷஃபாலி வர்மாவால் அதிகமாவார்கள் என கேப்டன் ஹர்மன் கூறியிருந்தார். இது முற்றிலும் உண்மை. மக்கள் கிரிக்கெட் பார்ப்பதற்கு முதன்மையான காரணம், அதில் கிடைக்கும் பரபரப்புக்காக தான். அந்தப் பரபரப்பு தான் இன்று வரை, ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது. அந்தப் பரபரப்பு ஒவ்வொரு பந்திற்கும் ஷஃபாலி வர்மாவால் கொடுக்க முடிகிறது.

ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா

ஆடவர் கிரிக்கெட்டில் கிடைக்கும் அதே பரபரப்பு மகளிர் கிரிக்கெட்டிலும் இருக்கிறது என அனைவருக்கும் தெரியப்படுத்தியது தான், இந்த டி20 உலகக்கோப்பைக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.

நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றால், 1983ஆம் ஆண்டு கபில் தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிமிடங்களை மீண்டும் உருவாக்கலாம். அதற்கு ஷஃபாலி வர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு, இந்திய அணி தகுதி பெற 15 வீராங்கனைகள், உடன்சென்ற பிசிசிஐ அலுவலர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருமே முக்கியக் காரணம் தான். ஆனால், ரசிகர்களை ஈர்த்ததில் பெரும்பங்கு ஷஃபாலிக்கே உள்ளது.

பந்தை சிக்சருக்கு விளாசும் ஷஃபாலி
பந்தை சிக்சருக்கு விளாசும் ஷஃபாலி

அந்த ஷஃபாலியின் பயணத்தைப் பற்றி பார்க்கலாம்...

விளையாட்டு வீராங்கனைகள் தலை முடியை வெட்டுவது சாதாரண விஷயம் தான். ஆனால் ஷஃபாலி வர்மா, தனது தலை முடியை வெட்டியதற்குப் பின்னால் ஆச்சர்யமூட்டும் கதை ஒளிந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் ஆடினார்.

அதற்காக ஹரியானாவின் லாலி பகுதியிலிருந்து, தனது தந்தையுடன் சச்சினைப் பார்க்க வந்துள்ளார் ஷஃபாலி. அங்கே தொடங்கியது ஷஃபாலியின் கிரிக்கெட் ஆசை. அப்போது அவருக்கு வயது 10.

சச்சினுடன் ஷஃபாலி
சச்சினுடன் ஷஃபாலி

இதையும் படிங்க: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

அதையடுத்து சின்னச்சின்ன கிரிக்கெட் பயிற்சிகள். ஒவ்வொரு பயிற்சி தொடங்கும்போதும் ஷஃபாலியின் அப்பா கூறுவது, யார் பந்து வீசினாலும் அச்சமின்றி ஆடவேண்டும் என்பதுதான். அதனாலேயே அச்சமின்றி அதிரடியில் கலக்கியுள்ளார்.

திடீரென ஒருநாள் தனது அண்ணன் காய்ச்சலால் படுக்க, அவர் ஆடவேண்டிய கிரிக்கெட் போட்டியில் பாய் கட் (Boy Hair-Cut) செய்துவிட்டு ஷாஃபாலியை, அவரது அப்பா களமிறக்குகிறார். ஷஃபாலியும் எந்த பந்துவீச்சாளரையும் கண்டு மிரளாமல் அடித்து துவம்சம் செய்கிறார்.

எந்த அளவிற்கு என்றால், அந்தத் தொடரின் இறுதியில் ஆட்டநாயகன் விருதினை வாங்கும் அளவிற்கு மிரட்டுகிறார். 10 வயதாகும் சிறுமி ஒருவர், ஆடவர் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கியது உள்ளூரில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் செய்தியாகியது.

அங்கே தொடங்கிய ஷஃபாலியின் பயணம், ரோட்டக்கில் உள்ள ஸ்ரீராம் நரைன் கிரிக்கெட் அகாதமியை நோக்கி பயணிக்கிறது. மகளிர் கிரிக்கெட்டர்கள் யாரும் இல்லாததால் ஆடவர் கிரிக்கெட்டர்களுடன் பயிற்சி செய்ய வேண்டிய நிலை வந்தபோதும், ஷஃபாலி அசரவில்லை. பயிற்சியைத் தொடர்ந்தார்.

ஸ்ரீராம் நரைன் அகாதமியில் ஷஃபாலி
ஸ்ரீராம் நரைன் அகாதமியில் ஷஃபாலி

ஹரியானா ஆடவர் அணிக்காக ஆடிய ஆஷிஷ் ஹூடா, மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் பந்துவீசுபவர். ஆனால் ஷஃபாலியோ அவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு முறை பேட் (pad) கட்டி களத்தில் இறங்கும்போதும், தனது அப்பா சொன்னதை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு அனைவரையும் அச்சமின்றி எதிர்கொண்டார்.

அதன் விளைவு ஹரியானாவின் ஜூனியர் அணியில் இடம்கிடைக்கிறது. அங்கே பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் வெளுத்து வாங்க, சீனியர் அணிக்கு அதிரடியாக மாற்றப்படுகிறார். அதையடுத்து சீனியர் அணியான நாகலாந்தை ஹரியானா எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டியில் 56 பந்துகளுக்கு 128 ரன்களை அடிக்கிறார். எங்கும் எதற்காகவும் தனது பாணியை மாற்றாமல், ரன்களை சேர்க்கிறார். அதையடுத்து நடந்த யு-23 வீராங்கனைகளுக்கான தொடரில், ஹரியானா அணியில் ஆடிய ஷஃபாலி, 6 போட்டிகளில் 463 ரன்கள் சேர்த்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அதுவும் 197.86 ஸ்ட்ரைக் ரேட்டில். மற்ற வீராங்கனைகளிலிருந்து ஷஃபாலி மாறுபடுவது இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தான். மகளிர் கிரிக்கெட்டர்களில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு, தனது ஸ்ட்ரைக் ரேட்டை தக்க வைத்துள்ளார். இந்த உலகக்கோப்பைத் தொடரிலும், 161 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவது சர்வதேச வீராங்கனைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஷஃபாலி வெலாசிட்டி அணிக்காக களமிறங்கினார். 'ட்ரையல் பிளேசர்ஸ்' அணிக்காக தொடக்க வீராங்கனையாக களமிறங்கி, 31 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்தார்.

வெலாசிட்டி அணிக்காக ஆடிய ஷஃபாலி
வெலாசிட்டி அணிக்காக ஆடிய ஷஃபாலி

முக்கியமான விஷயம் என்னவென்றால், அதில் 5 பவுண்டரிகளோடு, ஒரு சிக்சரும் அடங்கும். இதனைப் பார்த்த இங்கிலாந்து கேப்டன் டேனியல் வியட், ''எங்கள் அணியின் வெற்றிக்கு ஷஃபாலியின் ஆட்டமும் முக்கியக் காரணமாக அமைந்தது.

அவரது ஹிட்டிங் ஸ்டைலைப் பார்த்து அவரது வயதினைக் கேட்டேன். 15 என தெரிந்தபோது அதிர்ச்சியோடு கலந்து ஆச்சரியமும் அடைந்தேன்'' என்றார்.

இதையும் படிங்க: #20YearsOfMithaliRaj: மகளிர் கிரிக்கெட்டின் கதவுகளைத் தகர்த்த மிதாலி!

கடந்த செப்டம்பரில் இளம் வீராங்கனைகளுக்கு வழிவிடும் வகையில், இந்திய ஜாம்பவான் மிதாலி ராஜ் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற, அந்த இடம் ஷஃபாலிக்கு வழங்கப்படுகிறது. மிதாலி ராஜின் இடத்தைப் பூர்த்திசெய்ய உங்களால் முடியுமா என ஷஃபாலியிடம் கேட்டபோது, எவ்வித சலனமுமின்றி, 'நிச்சயம் என்னால் முடியும்' என நம்பிக்கையாக கூறியது, சிலரது புருவங்களை உயர்த்தியது.

யு-16 அணிக்காக ஆடியபோது...
யு-16 அணிக்காக ஆடியபோது...

ஆனால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரண்டு அதிரடியான அரை சதத்தை அடித்து, இந்திய மகளிர் கிரிக்கெட்டை பின்பற்றுபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏனென்றால் அவருக்குத் துணையாக ஆடியது உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.

இந்திய அணியில் எப்போதும் ஆன்கர் இன்னிங்ஸை ஸ்மிருதி மந்தனா தான் ஆடியுள்ளார். ஆனால், அறிமுகத் தொடரிலேயே தனது ட்ரேடுமார்க்கை உலகுக்கு தெரியப்படுத்தினார், ஷஃபாலி. அங்கே தொடங்கிய பயணம் உலகக்கோப்பைத் தொடரில் உச்சத்திற்குச் சென்றுள்ளது.

சமீபத்தில் பிசிசிஐ விருது வழங்கும் விழாவில், சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வர்மா வென்றிருந்தார். அதனைப் பார்த்த அவரது தந்தை சஞ்சீவ், ஆனந்த கண்ணீரோடு அமர்ந்திருந்தார். ஏனென்றால் 2013ஆம் ஆண்டின்போது விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியவரிடம் ரூ.7.5 லட்சத்தைக் கொடுத்து ஏமாந்தார். அப்போது வீட்டில் வெறும் 280 ரூபாய் மட்டுமே பணம் இருந்தும் ஷஃபாலியின் கிரிக்கெட் பயிற்சி என்றுமே பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொண்டார்

யாரைப் பார்த்து கிரிக்கெட் வீராங்கனையாக வரவேண்டும் என நினைத்தாரோ, அவருடைய 30 ஆண்டு சாதனையை தனது அறிமுகத் தொடரிலேயே முறியடித்தார், ஷஃபாலி. பேட்ஸ்மேன்களின் பேட்டில் ஸ்வீட் ஸ்பாட் (sweet spot) என ஒரு இடம் இருக்கும்.

அந்த ஸ்வீட் ஸ்பாட்டில் சரியாக பந்து பட்டால் பேட்டிலிருந்து ஒரு விவரிக்க முடியாத உணர்வைக் கொடுக்கும் சத்தம் வரும். அந்த சத்தம் தற்போது ஷஃபாலியின் பேட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. அந்த சத்தம் நிச்சயம் இந்தியாவுக்கு கோப்பையை வாங்கிக்கொடுக்கும் எனும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

''When My Body Gets Tired, My Mind Says This is Where Winners are Made. When My Mind Gets Tired, My Heart Says This is Where Champions are Made'' என்ற புகழ்பெற்ற வசனம் "குலோரி ரோட்" என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும். அது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சரியாக பொருந்திப்போகும்.

கிட்டத்தட்ட அனைத்து உலகக்கோப்பைகளிலும் அரையிறுதிக்கோ அல்லது இறுதிப்போட்டி வரையிலோ வரும் இந்திய அணி சிறு சிறு தவறுகளால் தோல்வியைத் தழுவும். ஆனால், இம்முறைத் தொடரின் தொடக்கத்திலிருந்தே இறுதிப்போட்டியில் வெல்லும் முனைப்போடு இந்திய அணி விளையாடி வருகிறது.

இதுவரை உலகக்கோப்பைத் தொடர்களில் ஐந்து அரையிறுதி, இரண்டு இறுதிப்போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஆனால், இம்முறை எந்தத் தவறும் நடக்காது என நம்பிக்கை வைத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனைப் படைக்க வாழ்த்துகள்...!

இதையும் படிங்க: கிரிக்கெட்டர் ஸ்மிருதி மந்தனா!

Last Updated : Mar 7, 2020, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.