கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் அணிக்காக ஆடிய பட்லரை, பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அஸ்வினின் இந்த செயல் ஸ்பிரிட் ஆஃப் தி கேமை பாதிப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.
அந்தப் போட்டி முடிவடைந்த பின்னரும் அஸ்வின் - பட்லர் இருவரும் கை குலுக்காமல் சென்றது இன்றுவரை பேசப்பட்டுவருகிறது. தற்போது கரோனா வைரஸால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அஸ்வின் - பட்லரை மன்கட் செய்ததை வைத்து மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் பதிவிட்டனர். இதனை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட மீண்டும் ட்விட்டரில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பட்லர் பேசுகையில், '' நான் தனிமைப்படுத்தப்பட்டால் இந்திய வீரர் அஸ்வினுடன் இருக்க விரும்புவேன். அவர் என்னை மன்கட் செய்து ஒரு வருடம் ஆகிறது. சமீபத்தில் அந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் குறுகிய கால தொடராக நடத்தவேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: ‘மான்கட்டை’ சுட்டிக்காட்டி பொதுமக்களை வீட்டிலிருக்க சொன்ன அஸ்வின்!