T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் ஜெர்சி அணி ஐக்கிய அரபு நாடுகள் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற ஜெர்சி அணி முதலில் பேட்டிங்கத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜெர்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதன்பின் அந்த அணியின் பெஞ்சமின் வார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்த தொடங்கினார்.
அதிரடியாக விளையாடிய வார்ட் 24 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரிகள் என 47 ரன்களை விளாசித்தள்ளினார். இதன் மூலம் ஜெர்சி அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஐக்கிய அரபு நாடுகள் அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்திருந்தாலும் இறுதியில் நிலைகுலைந்தது. அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை எடுத்தது. ஆனால் அடுத்த 52 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
-
Relive all the action from Jersey's 35-run win over men's #T20WorldCup Qualifier hosts UAE! 👇 https://t.co/uvhqDtNgNH
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Relive all the action from Jersey's 35-run win over men's #T20WorldCup Qualifier hosts UAE! 👇 https://t.co/uvhqDtNgNH
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2019Relive all the action from Jersey's 35-run win over men's #T20WorldCup Qualifier hosts UAE! 👇 https://t.co/uvhqDtNgNH
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2019
இறுதியில் ஐக்கிய அரபு நாடுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜெர்சி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு நாடுகள் அணியை வீழ்த்தியது.
ஜெர்சி அணி சார்பில் பென் ஸ்டீவன்ஸ், ஹாரிசன் கார்லியன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஹாரிசன் கார்லியன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #T20WorldCup: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய நமிபியா!