2020ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் 15ஆவது லீக் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த டி20 போட்டி பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஜவேரியா கானுக்கு 100ஆவது சர்வதேச போட்டியாகும். இதனால் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் வீராங்கனைகள் அனைவரும் ஜவேரியா கானுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஜவேரியா, தனது நன்றியை தெரிவித்தார். அந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை பாகிஸ்தானின் சனா மிர், பிஸ்மா மரூஃப், நிதா தார் ஆகிய மூன்று வீராங்கனைகள் நூறு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
100ஆவது போட்டியில் களமிறங்கிய ஜவேரியா கான், 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரன்அவுட்டானார். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தை 92 ரன்களை சேஸ் செய்ய விடாமல் மிரட்டிய நியூசிலாந்து!