ETV Bharat / sports

டாஸ் வென்று 500 ரன்கள் அடிப்பதும், நாங்கள் தோற்பதும்... டூ ப்ளஸிஸ்! - du Plessis frustrated

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்று 500 ரன்கள் அடித்த பின்னர் இருட்டில் பேட் செய்ய செல்கையில், மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து அழுத்தம் ஏற்பட்டு, தோல்வியடைவது அனைத்து போட்டியிலும் காப்பி, பேஸ்ட் போல் நடந்தது என டூ ப்ளஸிஸ் பேசியுள்ளார்.

It was like copy and paste in every Test match: Faf du Plessis frustrated
author img

By

Published : Oct 27, 2019, 10:28 PM IST

இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா அணி இழந்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூ ப்ளஸிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்று 500 ரன்களை குவித்திவடுகின்றனர். பின்னர் இரண்டாம் நாளின் இறுதியில் இருட்டில் எங்களை பேட்டிங் செய்ய பணித்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை எளிதாக கைப்பற்றிவிடுகிறார்கள். இதனால் அழுத்தம் ஏற்பட்டு தோல்வியை தழுவுகிறோம். இது அனைத்து போட்டிகளிலும் காப்பி, பேஸ்ட் செய்வதுபோல் நடந்தது.

தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் விளையாடும் இளைஞர்களை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தென்னாப்பிரிக்கா அணியில் ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் தயார் செய்ய வேண்டும். ஆனால், பொருளாதாரம் இதற்கு முக்கிய பிரச்னையாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் அணியில் கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் மூத்த வீரர்கள் பலர் ஓய்வுபெற்றும், கோல்பாக் டீல்களால் ஈர்க்கப்பட்டும் வெளியேறிவிட்டனர். இதனால் உலகக்கோப்பை உட்பட அனைத்து போட்டிகளிலும் போராட்டமில்லாத ஆட்டத்தையே தென்னாப்பிரிக்கா அணி வெளிப்படுத்தி வருகிறது என டூ ப்ளஸிஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘எழுந்து வா தங்கமே!’ - சுஜித்திற்காக ஹர்பஜன் சிங் உருக்கமான ட்வீட்

Intro:Body:

sports 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.