ETV Bharat / sports

‘போருக்குச் செல்வதைப்போல் இருந்தது’ - ஆஸி. தொடர் குறித்து சுப்மன் கில் - இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான எனது அறிமுக டெஸ்ட் போட்டியை விளையாடியது, ஒரு போருக்குச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

It felt like going to war: Shubman Gill on Test debut in Australia

author img

By

Published : Mar 10, 2021, 8:40 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுக வீரராகக் களமிறங்கினார்.

அத்தொடரில் சுப்மன் கில், இரண்டு அரைசதங்களுடன் 259 ரன்களை எடுத்து இந்திய அணி தொடரைக் கைப்பற்ற உதவியாக இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுப்மன் கில், அந்த அணிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடுவது போருக்குச் செல்வதைப்போல் இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நான் எனது அறிமுக டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டேன். அப்போட்டியில் நாங்கள் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்து விளையாடினோம்.

பீல்டிங் செய்தவரை நான் மிகவும் சாதாரணமாக இருந்தேன். ஆனால், அதன்பின் நாங்கள் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, போருக்குச் சொல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

ஏனெனில் நான் சிறுவயதில் சச்சினுக்கு எதிராக பிரெட் லீ பந்துவீசுவதைக் கண்டு ரசித்தவன். ஆனால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடியது கற்பனைப்போல இருந்தது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச அரங்கில் சாதனை படைத்த மந்தானா !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.