கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான முஷ்டாக் அலி தொடர் வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். மேலும் இத்தொடருக்கான மைதானங்களையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலமும் தங்களது உத்தேச அணியை அறிவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி கிரிக்கெட் சங்கம் இத்தொடருக்கான 42 பேர் அடங்கிய அணியை நேற்று அறிவித்தது. இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இஷாந்த் சர்மா, டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்களான உன்முகுந்த் சந்த், நிதீஷ் ராணா, பவன் சுயல், மனன் சர்மா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: சென்னை எஃப்சி - கிழக்கு வங்கம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமன்