ETV Bharat / sports

முக்கிய வீரர்களின் தொடர் காயங்கள்... ஓய்வில்லாமல் தொடர்ந்து செயல்படும் இந்திய அணி!

இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படக் காரணம், அவர்கள் ஒய்வின்றி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதுதானோ என சந்தேகம் எழுந்துள்ளது.

is-too-much-cricket-hurting-indian-players

author img

By

Published : Feb 7, 2020, 1:33 PM IST

சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பிசிசிஐ பொன்முட்டை இடும் வாத்து. இந்திய அணி எந்த நாட்டிற்கு பயணம் சென்று கிரிக்கெட் ஆடினாலும், அங்கே அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஐசிசியின் வருமானத்தில் பிசிசிஐயின் பங்கு 30 சதவீதத்திற்கும் மேல். மற்ற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் எல்லாம் 15 சதவீதத்தையே தொடாத நிலையில், பிசிசிஐ 30 சதவீதத்தை பங்காக கொடுத்துவருகிறது.

இவையனைத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் மட்டும்தான் சாத்தியமாகிறது. நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து தொடருக்கான அட்டவணையைப் பற்றிய அதிருப்தியில் பிசிசிஐயை குற்றம் சாட்டியிருந்தார். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருநாள் முன்னதாக மைதானத்தில் களமிறங்கி உடனடியாக போட்டியில் பங்கேற்கிறோம் என்று தோன்றுவதாகக் கூறியது சர்ச்சையாகியது.

விராட் கோலி
விராட் கோலி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று முடிந்த நிலையில், அடுத்த நாளே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டது.

கடந்த 10 ஆண்டுகளில் எந்தத் தொடரை எடுத்துக்கொண்டாலும் இந்திய அணி குறைந்தது அரையிறுதி வரை தகுதிபெற்றிருக்கிறோம். இந்திய அணி அளவிற்கு வேறு அணிகளால் வெற்றிகளையும் பெற முடியவில்லை. ஆனால் இந்திய வீரர்களின் உடல்நிலையிலும் ஆரோக்கியத்திலும் பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளதா என்பதைப் பார்த்தால், சிறிது கேள்வி எழத்தான் செய்கிறது.

2019-20 ஆண்டில் இந்திய அணியின் பயணம்:

  • ஐபிஎல் தொடர் : மார்ச் 23 முதல் மே 12 வரை
  • ஐசிசி உலகக்கோப்பைத் தொடர்: மே 30 முதல் ஜூலை 14 வரை
  • இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணம் : ஆகஸ்ட் 03 முதல் செப். 3 வரை
  • தென் ஆப்பிரிக்க அணியின் இந்திய பயணம் : செப். 15 முதல் அக். 23 வரை
  • வங்கதேச அணியின் இந்திய பயணம் : நவ. 3 முதல் நவ, 26 வரை
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய பயணம் : டிச. 6 முதல் டிச. 22 வரை
  • ஆஸ்திரேலிய அணியின் இந்திய பயணம் : ஜன.14 முதல் ஜன. 19 வரை
  • இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் : ஜன.24 முதல் மார்ச். 4 வரை
    இந்திய அணியின் அட்டவணை
    இந்திய அணியின் அட்டவணை

ஒரு தொடர் முடிவடைந்த பின், மற்றொரு தொடருக்கு இந்திய அணி தயாராவதற்கான நேரம் கூட சரியாக கொடுக்கப்படவில்லை. இதனால் அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால் இந்திய அணியின் முக்கிய வீரர்களும் காயத்தை சந்தித்து வருகின்றனர்.

உலகக்கோப்பைத் தொடருக்கு பின் காயமடைந்த வீரர்கள்:

  • நியூசிலாந்து தொடரிலிருந்து தொடக்க வீரர் ஷிகர் தவான் விலகினார்.
  • நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து ரோஹித் சர்மா தற்போது விலகியுள்ளார்.
  • வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து இன்றுவரை அவர் மீளாமல் இருக்கிறார்.
  • வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட ஹெர்னியா பிரச்னை காரணமாக அணிக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்.
  • வங்கதேச தொடரில் சிறப்பாக ஆடிய தீபக் சஹார் காயத்தால் இன்னும் அணிக்குள் திரும்ப முடியவில்லை.
  • இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா காயத்திலிருந்து மீண்டு, இப்போதுதான் அணிக்குள் இருக்கிறார்.
    ஹர்திக் பாண்டியா
    ஹர்திக் பாண்டியா

சில நாள்களுக்கு முன்னதாக இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்துகொண்டிருக்கும் கேஎல் ராகுலும் இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களைப் பற்றியும், ஓய்வில்லாமல் கிரிக்கெட் ஆடுவதைப் பற்றியும் பேசியுள்ளார். அதில், சர்வதேச ஆட்டங்கள் அடுத்தடுத்து இருப்பதால் இந்திய அணியினர் உடல்தகுதியை பராமரிப்பதற்கு கூட நேரமில்லாத சூழல் நிலவுகிறது.

பல வீரர்களின் பெயர்கள் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு பிசிசிஐ அட்டவணை வழிவகுக்கும் - இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

மேலும் நியூசிலாந்து தொடருக்கு பின், உனடியாக தென் ஆப்பிரிக்கத் தொடர், ஐபிஎல் என இந்திய அணியின் அட்டவணை நிரம்பியுள்ளதால், இந்திய அணி வீரர்களின் உடல்நிலையில் பிசிசிஐ கவனம் கொள்ளவேண்டும் என ரசிகர்களும் விமர்சகர்களும் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனென்றால் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில தலைசிறந்த வீரர்கள் வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்படியான வீரர்கள் உருவாகினர். கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின், கங்குலி, டிராவிட், ஜாகீர் கான், தோனி, கோலி, ரோஹித் சர்மா என இது தொடர்கிறது. தற்போதுள்ள அணியில் யாரெனும் ஒரு வீரர் காயம் என்று வெளியேறினால் அந்தத் தொடரில் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

தொடக்க வீரர்கள் தவான் - ரோஹித் சர்மா
தொடக்க வீரர்கள் தவான் - ரோஹித் சர்மா

உலகக்கோப்பை டி20 தொடரில் காயம் காரணமாக விராட், பும்ரா, ரோஹித் என யார் வெளியேறினாலும் இழப்பு நிச்சயம் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும்தான்.

இதையும் படிங்க: 'நிலையில்லா கூட்டத்தில் நிலைக்கும் பெயர் யஷஸ்வி ஜெய்ஷ்வால்'

Intro:Body:

Team India, Virat Kohli, Injury

Hyderabad: Team India is one of the most successful cricket teams in the world. The numbers from the last 10 years show that no team has won more matches than the Men in Blue. If you look at India's record in ICC tournaments you will find them in semifinals or finals in almost every mega-event in the last 10 years. But the question is: Is it because India plays more cricket than any cricket team in the world?

More cricket means more matches and more matches increase the chance to win more games. There is absolutely no harm in playing more cricket but the big question is, how is BCCI taking care of its key players in order to keep them away from injuries.

India is touring New Zealand currently and we have heard a lot about the jet lag. In a press conference skipper, Virat Kohli also took a dig at the BCCI by saying that the team is getting closer and closer to landing on the stadium and playing the match straight away.

Injuries and Key Players

The effect of playing too much cricket is too high. Currently, six key Indian cricketers are suffering from career-threatening injuries.

Opener Shikhar Dhawan got injured and was ruled out of the New Zealand tour and now his partner Rohit Sharma got injured as well. Sharma had been ruled out of the ODI and Test series in New Zealand due to a calf muscle injury.

Hardik Pandya is yet to recover from his back injury and, Bhuvneshwar Kumar is suffering from a hernia. Deepak Chahar too suffered from a back injury. Pace spearhead Jasprit Bumrah picked up a stress fracture in his back and now Rohit Sharma has sustained a calf muscle injury.

Is India really playing too much cricket?

India is a cricket crazy nation but the cricket pundits are forecasting that if Men in Blue keep playing too much cricket, then, it will not just harm their players but also harm the popularity of the sports.

Let's have a look at India's 2019-20 season

- ICC Cricket World Cup 2019 - July 2019

- India tour of West Indies - August 2019

- South Africa tour of India - September 2019

- Bangladesh tour of India - November 2019

- West Indies tour of India - December 2019

- Sri Lanka tour of India - January 2020

- Australia tour of India - January 2020

- India tour of New Zealand - January 2020

What are players and experts thinking?

Prior to India's maiden T20I series win in New Zealand, skipper Kohli had also brought forward the same opinion and questioned the scheduling of international cricket. Following the series, wicketkeeper-batsman KL Rahul also came forward and expressed that it is tough on the players to keep themselves fit with plenty of action in international cricket.

Cricketer-turned-commentator Aakash Chopra also made a valid point and questioned the Men in Blue's hectic schedule by naming plenty of players who are a part of the injury list at the moment.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.