ETV Bharat / sports

'கிரிக்கெட்டிலும் வாரிசு அரசியலா?' - கொந்தளித்த ரசிகர்கள்! - பிசிசிஐ முன்னாள் தலைவர்

மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தல்களில் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளே பெரும்பான்மை வகித்து வருகின்றனர்.

#BCCI
author img

By

Published : Sep 29, 2019, 11:01 AM IST

லோதா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் (பிசிசிஐ), மாநில கிரிக்கெட் சங்கத்திலும் பல விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புதிய விதிமுறைகளின்படி இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் மாநில மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் முன்னாள் நிர்வாகிகளின் உறவினர்கள் மற்றும் வாரிசுகள் நாடு முழுவதும் முக்கிய பதவிகளைப் பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் இடம்பிடித்த வாரிசுகள்:

  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக, முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுளார். இவரை நியமித்ததின் மூலம் இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷாவின், மகன் ஜெயதேவ் ஷா சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் சிராயு அமீனின் மகன் பிரணவ் அமீன் பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜெய்வந்த் லீலின் மகன் அஜித் லேலே அச்சங்கத்தின் செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமல் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆஷிர்பாத் பெஹெராவின் மகன் சஞ்சய் பெஹாரா, ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தங்களது சொந்தங்கள் மற்றும் வாரிசு உரிமையைப் பயன்படுத்தி கிரிக்கெட் சங்கத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளே பெரும்பான்மை பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முதல் பெண் தலைவர்... வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.