இந்தியாவின் ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) என்ற உள்ளூர் டி20 தொடரை இந்தாண்டு முதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இத்தொடரின் முதல் சீசன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல் சீசனை நவம்பர் மாதம் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுவதால், எல்பிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக நவம்பர் 21ஆம் தேதி எல்பிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஏழு அணிகளுடன் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், லங்கா பிரீமியர் லீக் அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ் அணி, இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதானை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெயரை இர்ஃபான் பதான் பெற்றுள்ளார்.
-
Former Indian international cricketer @IrfanPathan, will feature in the Lanka Premier League - which is scheduled to begin on November 21.
— Lanka Premier League (@LPLt20official) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
While an official announcement is expected shortly. @KandyTuskers@RajapaksaNamal @RoshanCricket @RusselArnold69 @Damith1994 @LPLt20official pic.twitter.com/Vtb9rqMulg
">Former Indian international cricketer @IrfanPathan, will feature in the Lanka Premier League - which is scheduled to begin on November 21.
— Lanka Premier League (@LPLt20official) October 31, 2020
While an official announcement is expected shortly. @KandyTuskers@RajapaksaNamal @RoshanCricket @RusselArnold69 @Damith1994 @LPLt20official pic.twitter.com/Vtb9rqMulgFormer Indian international cricketer @IrfanPathan, will feature in the Lanka Premier League - which is scheduled to begin on November 21.
— Lanka Premier League (@LPLt20official) October 31, 2020
While an official announcement is expected shortly. @KandyTuskers@RajapaksaNamal @RoshanCricket @RusselArnold69 @Damith1994 @LPLt20official pic.twitter.com/Vtb9rqMulg
மேலும் கண்டி டஸ்கர்ஸ் அணியில், சர்வதேச நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், குசால் பெரேரா, குசால் மெண்டீஸ், நுவான் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிட்ச்சை கணிக்க தவறிவிட்டோம் - மும்பை அணியுடனான தோல்வி குறித்து ஷ்ரேயாஸ்