இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகம் பேசப்பட்ட நபராக வலம்வருபவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான்.
உத்தரப் பிரதேசத்தில் சிறு கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் மீதான ஆர்வத்தோடு 11 வயதில் மும்பை வந்த ஜெய்ஸ்வால், பால் பண்ணை, பானிபூரி கடைகளில் பணியாற்றியபடி தெருக்களில் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடி, தனது 17ஆவது வயதில் ஐபிஎல் தொடரில் தடம்பதித்துள்ளார்.
-
The youngest ever to hit a double hundred in List A cricket 💯💯
— Rajasthan Royals (@rajasthanroyals) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yashasvi Jaiswal AKA wonder kid, welcome to the Indian Premier League🤗#IPLAuction #YashasviIsARoyal pic.twitter.com/7bnmYKTuMw
">The youngest ever to hit a double hundred in List A cricket 💯💯
— Rajasthan Royals (@rajasthanroyals) December 19, 2019
Yashasvi Jaiswal AKA wonder kid, welcome to the Indian Premier League🤗#IPLAuction #YashasviIsARoyal pic.twitter.com/7bnmYKTuMwThe youngest ever to hit a double hundred in List A cricket 💯💯
— Rajasthan Royals (@rajasthanroyals) December 19, 2019
Yashasvi Jaiswal AKA wonder kid, welcome to the Indian Premier League🤗#IPLAuction #YashasviIsARoyal pic.twitter.com/7bnmYKTuMw
இந்நிலையில் ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் தொடர் பற்றி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் பானிபூரி விற்றுவந்தார். ஆனால் இன்று தனது விடா முயற்சியால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். அவரது விடாமுயற்சி மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையளிக்கும் கதையாகும். உண்மையில் ஐபிஎல் தொடரானது கனவுகள் நனவாகும் இடமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
17 old Yashasvi Jaiswal used to sell pani puris on the streets for a living 2 years ago. Today this talented cricketer is bought by a franchise in the #IPL2020Auction for 2.40 crores. Fantastic & inspirational story 🙏 #IPL really is a place where dreams come true👍 #ting 🏏
— Preity G Zinta (@realpreityzinta) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">17 old Yashasvi Jaiswal used to sell pani puris on the streets for a living 2 years ago. Today this talented cricketer is bought by a franchise in the #IPL2020Auction for 2.40 crores. Fantastic & inspirational story 🙏 #IPL really is a place where dreams come true👍 #ting 🏏
— Preity G Zinta (@realpreityzinta) December 19, 201917 old Yashasvi Jaiswal used to sell pani puris on the streets for a living 2 years ago. Today this talented cricketer is bought by a franchise in the #IPL2020Auction for 2.40 crores. Fantastic & inspirational story 🙏 #IPL really is a place where dreams come true👍 #ting 🏏
— Preity G Zinta (@realpreityzinta) December 19, 2019
தற்போது ப்ரீத்தி ஜிந்தாவின் ட்விட்டர் பதிவானது சமூக வலைதலங்களில் வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - தந்தை பெருமிதம்!