13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. கடந்த மாதம் ஐபிஎல் வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளை அரை மணி நேரம் முன்னதாக தொடங்குவதற்கு ஒளிபரப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இதனால் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகள் 8 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது.
தற்போது இந்த நேரம் மாற்றம் குறித்து ஆலோசனை செய்வதற்காக ஐபிஎல் ஒழுங்காற்றுக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை முன்னதாக நடத்துவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஒளிபரப்பாளர்கள் கூறுகையில், போட்டிகளை முன்னதாக நடத்துவதால் அதிகமான பார்வையாளர்களை எட்ட முடியும், ரசிகர்களும் விரைவாக போட்டி முடிந்து தங்களது வீடுகளுக்கு திரும்பமுடியும் என்றனர்.
ஆனால் போட்டிகளை விரைவாக தொடங்குவதால் பிட்ச்சில் ஏற்படும் ட்யூ இல்லாமல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும். அதேபோல் ஒளிபரப்பாளர்களுக்காக கிரிக்கெட் போட்டிகளின் நேரத்தை மாற்றுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: வெளியேறிய செரீனா... பழிதீர்த்துக்கொண்ட வாங்!