ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதேனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். அதேபோல் வரவுள்ள ஐபிஎல் தொடரில் அணியின் பெயரை மாற்றவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதனிடையே நேற்று (பிப். 17) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளிலிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றம் செய்ததோடு, அணியின் புதிய இலட்சினையையும் (லோகோ) வெளியிட்டுள்ளது.
-
Nave andaaz hor wakhre josh de naal 🎺
— Punjab Kings (@PunjabKingsIPL) February 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
swagat karo #PunjabKings da 💥👑🤩#SaddaPunjab pic.twitter.com/IVvmsx56Qb
">Nave andaaz hor wakhre josh de naal 🎺
— Punjab Kings (@PunjabKingsIPL) February 17, 2021
swagat karo #PunjabKings da 💥👑🤩#SaddaPunjab pic.twitter.com/IVvmsx56QbNave andaaz hor wakhre josh de naal 🎺
— Punjab Kings (@PunjabKingsIPL) February 17, 2021
swagat karo #PunjabKings da 💥👑🤩#SaddaPunjab pic.twitter.com/IVvmsx56Qb
மேலும் இது குறித்து அணி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே அணியின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்துவந்ததாகவும், இது தற்போது எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணி, பெயரில் மாற்றம் செய்யாமல் தனது இலட்சினையில் மட்டும் மாற்றத்தை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் மெத்வதேவ்!