ETV Bharat / sports

ஐபிஎல் ஏலம்: விலைபோன 48 வயது வீரரும்... வாங்கப்படாத 14 வயது வீரரும்...!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 13ஆவது சீசனுக்கான ஏலத்தில் 48 வயது வீரர் பிரவின் தாம்பேவை கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

pravin tambe, Noor Ahmad
pravin tambe
author img

By

Published : Dec 20, 2019, 7:38 PM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. மொத்தம் 73 இடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 338 வீரர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தின் முடிவில் 62 வீரர்கள் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். அவர்களுக்காக மொத்தம் ரூ. 140.30 கோடி செலவு செய்யப்பட்டது.

இதனிடையே இந்த ஏலத்தில் மிக இளம் வயது வீரராக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 14 வயதே நிரம்பிய நூர் அகமது லக்கன்வாலின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவருக்கு அடிப்படைத் தொகையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள நூர் அகமது, சமீபத்தில் யு-19 ஆசிய கோப்பையில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

pravin tambe, பிரவின் தாம்பே
பிரவின் தாம்பே

இதே வேளையில் நேற்றைய ஏலத்தில் அதிக வயதான வீரராக மும்பையைச் சேர்ந்த 48 வயதான பிரவின் தாம்பேவும் இடம்பெற்றிருந்தார். முந்தைய ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடியிருந்த இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஏலத்தில் இவர்கள் இருவரில் இளம் வீரருக்கே வாய்ப்பு அதிகம் என்று அனைவரும் எண்ணியிருந்த வேளையில், 48 வயதான பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சம் கொடுத்து வாங்கியது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் தேர்வான அதிக வயதான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

வரும் ஐபிஎல் தொடரில் தம்பேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் இவரே ஐபிஎல் தொடரில் விளையாடும் வயதான வீரர் என்ற சாதனையைப் படைப்பார். முன்னதாக கொல்கத்தா அணிக்காக 44 வயதில் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக்கே, ஐபிஎல் தொடரில் விளையாடிய வயதான வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பிரவின் தாம்பே, முதல்தர போட்டி ஒன்றில்கூட விளையாடாமல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கி விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் முதன்முறையாக களமிறங்கியபோதே அவருக்கு 41 வயது ஆகும். இதுவரை தாம்பே மொத்தமாக 33 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் கொல்கத்தா அணிக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் சாதனையையும் இவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து!

Intro:Body:

14 year old Noor Ahmad not selected and 48 year old Pravin Tambe auctioned for IPL 2020

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.