ETV Bharat / sports

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு - IPL match

இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கூட்டாக பங்கேற்கும் நட்சத்திரப் போட்டியின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் நிர்வாக குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளர்.

ஐபிஎல் போட்டி, ipl, ipl match
ஐபிஎல் போட்டி, ipl, ipl match
author img

By

Published : Feb 21, 2020, 1:36 PM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மேலும், இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மே 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, எட்டு அணிகளில் உள்ள வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையேயான காட்சிப் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். இதனால் அந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி காணப்பட்டது.

இதனிடையே தற்போது புதிய செய்தியாக, அனைத்து வீரர்களும் பங்கேற்கும் 'காட்சிப் போட்டி' தள்ளி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி, ipl, ipl match
ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல்

இது தொடர்பாக பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவர், 'அனைத்து வீரர்கள் பங்கேற்கும் போட்டியை சீசன் முடிந்த பின்னர் நடத்த முடிவு செய்துள்ளோம். ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்த பின், அதில் விளையாடிய வீரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே, காட்சிப் போட்டிக்கான அணிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டி நடைபெறும் இடம், தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்' என்று கூறினார்.

முன்னதாக ஐபிஎல் காட்சிப் போட்டியில் தங்கள் அணி வீரர்கள் பங்கேற்றால் காயம் ஏற்படும், அது பயிற்சியைப் பாதிக்கும் என்பதால், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் போட்டி, ipl, ipl match
ஐபிஎல்

மேலும் இதுபோன்ற போட்டிகளில் தோனி, கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் பிசிசிஐ தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்று ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒரு அணியின் நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.க்கு எதிராக இந்தியா பேட்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.