ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் வாங்கியது.
இதுகுறித்து பேசிய கௌதம், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் விளையாட உள்ளேன் என்பதை கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதிலும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் நான் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. அவர் களத்தில் செயல்படும் விதத்தைக் கண்டு எப்போதும் உத்வேகமடைந்ததுண்டு.
-
Dream come true! The words mean it all! See you soon in #Yellove @gowthamyadav88! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/IIPzq6VJLZ
— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dream come true! The words mean it all! See you soon in #Yellove @gowthamyadav88! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/IIPzq6VJLZ
— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021Dream come true! The words mean it all! See you soon in #Yellove @gowthamyadav88! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/IIPzq6VJLZ
— Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021
ஆனால் தற்போது நான் அவருடன், டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். தோனி, ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன்.
அதைத்தவிர எனது ஏலத்தொகை குறித்து நான் எதையும் சிந்திக்க வில்லை. ஏனெனில் என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனால் என்னால் அணிக்கு என்ன செய்யமுடியும் என்பதை பற்றிய சிந்தனையே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கே), சுரேஷ் ரெய்னா, ராயுடு, கே.எம். ஆசிப், தீபக் சஹார், டுவைன் பிராவோ, ஃபாப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர், ஜெகதீசன், கரன் ஷர்மா, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட், சாய் கிஷோர், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, கிருஷ்ணப்பா கௌதம், சேடேஷ்வர் புஜாரா, சி ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: வாங்கப்பட்ட-வாங்கப்படாத வீரர்களின் விவரம்!