ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடந்த நிலையில், அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு அணி வீரர்களும் தங்களது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டு முறை கோப்பையை வென்ற அணியாக வலம் வரும் கொல்கத்தா அணி இந்த ஆண்டில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் மிகத் தீவிரமாக இருக்கிறது. இதனால் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம்மை பயிற்சியாளராக நியமித்தது. உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பின் அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் வீரர்களின் தேர்வில் மிகவும் வேகமாக இயங்கி வந்தார். இதனிடையே கொல்கத்தா அணியின் புதிய ஃபீர்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபாஸ்டரை நியமித்துள்ளது.
இதுவரை கொல்கத்தா அணிக்கு சுபாதீப் கோஷ் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த நிலையில், அந்த இடத்திற்கு தற்போது ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜேம்ஸ் ஃபாஸ்டர் 7 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஃபாஸ்டர், இந்த ஆண்டு ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களுடன் கொல்கத்தா அணி களமிறங்குவதால், அந்த அணி மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்டது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது: சர்ஃபராஸ் கான்!