ETV Bharat / sports

மலிங்காவின் இடத்தை எங்களுக்கு பும்ரா நிரப்புகிறார் : பொல்லார்ட்

துபாய் : இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் லசித் மலிங்காவின் இடத்தை பும்ரா நிரப்பி வருகிறார் என பொல்லார்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

ipl-2020-bumrah-has-taken-over-the-mantle-from-malinga-says-pollard

author img

By

Published : Oct 19, 2020, 3:35 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான லசித் மலிங்கா, சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆண்டு நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இவர் இல்லாத குறையை அணியில் போல்ட் சரிசெய்தாலும், சில நேரங்களில் மலிங்கா இருக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்று பஞ்சாப் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டன. அதில் மும்பை அணிக்காக முதல் சூப்பர் ஓவரை வீசிய பும்ரா, வெறும் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் இறுதி நேரத்தில் அவர் வீசிய யார்க்கர்கள் பேட்ஸ்மேன்களை சிதறடித்தன.

பும்ரா
பும்ரா

இது குறித்து ஆட்டம் முடிந்து பொல்லார்ட் கூறுகையில், ”பும்ரா உலகத்தரம் வாய்ந்த வீரர். பல மாதங்களாக அனைத்து வகையான கிரிக்கெட் ஃபார்மெட்களிலும் முதலிடத்தில் உள்ளார். அவர் மும்பை அணியில் கற்று, இப்போது மும்பை அணிக்காக முன் நிற்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பாக, லசித் மலிங்கா செய்த வேலையை, இப்போது அணிக்காக பும்ரா செய்து வருகிறார். அனைத்தையும் மலிங்காவிடம் இருந்து கற்றுள்ளார்'' என்றார்.

பொல்லார்ட் பேட்டி

நாங்கள் எந்த இடத்தில் இந்தப் போட்டியை தவறவிட்டோம் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தப் போட்டியில் நிச்சயம் தோற்று போயிருக்கலாம். ஆனால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்தப் போட்டியில் எங்கள் தவறை சரிசெய்து, இன்னும் சிறந்த திட்டத்துடன் களமிறங்குவோம்'' என்றார். மும்பை அணி அடுத்தப் போட்டியில் சென்னை அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த வெற்றி ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வர உதவும்" - கே.எல்.ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.