ETV Bharat / sports

14ஆவது ஐபிஎல் தொடர்: ஹாட்ரிக் முனைப்பில் மும்பை; முதல் கோப்பைக்கான ஆர்வத்தில் ஆர்சிபி! - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐந்து மாத இடைவெளியில் இரண்டு ஐபிஎல் தொடர்கள் நடப்பது என்பது அணியினருக்கு கடினம் தான் என்றாலும், கரோனா பொது முடக்க அச்சத்தில் கலங்கியிருக்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் வரும் ஏழு வாரமும் ஐபிஎல் தான் பெரும் விருந்தாய் அமையப் போகிறது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,

author img

By

Published : Apr 8, 2021, 11:15 PM IST

சென்னை: கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவையே அச்சுறுத்தி வருகிறது. தினமும் ஒரு லட்சம் புதிய கரோனா தொற்றுகள் நாடு முழுவதும் உறுதி செய்யப்படுகிறன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னையில் நாளை (ஏப்.9) பார்வையாளர்களின்றி தொடங்குகிறது.

ஐந்து மாத இடைவெளியில் இரண்டு ஐபிஎல் தொடர்கள் நடப்பது என்பது அணியினருக்கு கடினம் தான் என்றாலும், கரோனா பொது முடக்க அச்சத்தில் இருக்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் வரும் ஏழு வாரமும் ஐபிஎல் தான் பெருவிருந்தாய் அமையப்போகிறது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நாளை தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது. இம்முறையெனும் கோப்பையை ருசித்தே ஆக வேண்டிய வெறியில் விராட் கோலியும், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா தனது மூன்றாவது முறையாக தொடரைக் கைப்பற்றும் நோக்கிலும் களம் காணுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஆட்டமிழந்தால் குயின்டன் டி காக்கும், டி காக் தவறும் பட்சத்தில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என அடுக்கடுக்கான டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களையும், ஆல்-ரவுண்டர்களான பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட் ஆகியோர் உள்ளனர். பவுன்ஸ் அட்டாக்கிற்கு போல்ட், பும்ரா போன்றோரையும், ஃகுக்கிளிகள் வீச ராகுல் சாஹரையும் கைவசப்படுத்தி, உலகத்தரமான அக்மார்க் டி20 அணி தாங்கள் தான் என்பதை வருடா வருடம் உறுதிப்படுத்தி வருகிறது.

விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கப் அடிக்க பத்து பொருத்தங்கள் இருந்தும், வருடா வருடம் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு வெற்றி கைக்கூடி வர மறுக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் கிளேன் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலமெடுத்தியிருக்கிறது ஆர்சிபி. மேக்ஸ்வெல்லிடமிருந்து அதிக 'மேக்ஸிமம்'களை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கரோனாவிலிருந்து குணமாகி தேவ்தத் படிக்கல் அணிக்கு திரும்பியுள்ளது கோலிக்கு சற்று ஆசுவாசமாக இருக்கும்.

மூன்று முறை சாம்பியனானும், ஐபிஎல் தொடரின் மஞ்சள் படையினருமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறையும் கலவையான வீரர்களைக் கொண்டே களமிறங்குகிறது. வீரர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொண்டு வருவதில் பெயர் பெற்றவரான தோனி, மீண்டும் ஒருமுறை கோப்பையை பெற போராடுவார்.

கம்பீர் தலைமையில் இரண்டு முறை கோப்பையை வென்றதற்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. ரஸ்ஸல், மோர்கன், சுப்மேன் கில், நரைன் என்னும் ஏற்றயிறக்க வீரர்களைக் கொண்டுள்ள கொல்கத்தா, இத்தொடரிலாவது தனது முத்திரையை அழுத்தமாகப் பதிய வேண்டும்.

அதிகம் கவனம் ஈர்க்ரகாமல், அமைதியாக ஆட்டத்தைத் தட்டிச் செல்லும் திறன் உடையவர்கள் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியினர். வரிசைக்கட்டி நிற்கும் வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்திறனை சரியாகப் பயன்படுத்தும்பட்சத்தில், இந்த அமைதிப்படைக்கு தான் கோப்பை என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் கடந்த இரண்டு வருடங்களில் கண்ட எழுச்சி என்பது வியக்கத்தக்கது. பாண்டிங்கின் 'ப்ராடக்ட்' என டெல்லி அணியை தயங்காமல் குறிப்பிடலாம். டெல்லி அணிக்கு தற்போதைய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித், ராஹானே, தவான், அஸ்வின் என மூத்த வீரர்களின் வழிகாட்டுதலோடு டெல்லி அணியின் எழுச்சியைத் அவர் தொடர்ச்சியாக நிலை நிறுத்தலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இத்தொடரிலிருந்து புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் பொறுப்பேற்றிருக்கிறார். கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு எடுத்துள்ள அணி நிர்வாகம், ஸ்டோக்ஸ், மில்லர் ஆகிய அதிரடி அசுரர்களைக் கொண்டு இந்த முறையாவது மாயாஜாலத்தை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பட்டாசை வெடிக்க வேண்டிய பஞ்சாப் அணி, கடந்த தொடர்களில் பஞ்சு பஞ்சாய் போனதற்குக் காரணம் வீரர்களிடம் மிஸ்ஸான கூட்டு உழைப்புதான். சென்ற வருடம் பிற்பாதியில் வெகுண்டெழுந்த 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' இம்முறை புதிய வீரர்களுடனும், புத்துணர்ச்சியுடனும் 'பஞ்சாப் கிங்ஸ்'-ஆக களம் காணுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.