ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.09) நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைக் குவித்தது. இந்நிலையில், வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரவிசந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பேசிய அஸ்வின், "பவர்பிளே ஓவர்களில் நான் கேரம் பந்துவீச்சை உபயோகித்தேன். பவர்பிளேவில் கேரம் பந்துவீச்சை நீங்கள் எந்தளவிற்கு உபயோகிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது உங்களுக்கு உதவும். போட்டியில் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியது மிகவும் அவசிமான ஒன்றாக விளங்கியது.
ஏனெனில் அவரது விக்கெட்டை தொடக்கத்திலேயே கைப்பற்றாவிட்டால், ஆட்டத்தின் போக்கை முழுமையாக அவர் மாற்றி விடுவார்" என்றார்.
இதையும் படிங்க:கேரளாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தூக்கிட்டுத் தற்கொலை!