ETV Bharat / sports

வான்கடே மைதானத்தின் 10 ஊழியர்களுக்குக் கரோனா தொற்று

ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும், சென்னை - டெல்லி அணிகளுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என மூத்த பிசிசிஐ அலுவலர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

wankhede ground , வான்கடே மைதானம்
IPL: 10 Wankhede ground staff, 6 event managers test positive for Covid
author img

By

Published : Apr 3, 2021, 8:22 PM IST

மும்பை: ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த வான்கடே மைதானத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலும், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஆட்டங்கள் நடைபெறும் என பிசிசிஐ நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்புள்ள சூழல், அங்கு நிலவுகிறது.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது," 10 ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆடுகளத்தைப் பராமரிக்க புதிய ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளோம்.

பிசிசிஐ நியமித்த நிகழ்ச்சி நிர்வாகக்குழுவினர் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் இந்நிலைமைக் குறித்து பிசிசிஐ மூத்த அலுவலர், "மும்பையில் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டாலும் வீரர்கள் பயோ-பப்பிளில் தான் இருக்கிறார்கள். ஆதலால் ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டி நடைபெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என நம்புகிறோம்.

தற்போது எந்த அணிகளும் வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மைதானத்தைப் பராமரிக்கவும், ஆடுகளத்தைச் சீர்படுத்தவும் போதுமான ஊழியர்களை பணியமர்த்தியிருந்தாலும், இச்சூழலை தீவிரமாக கண்காணித்தும் வருகிறோம்" என்று கூறினார்.

சென்னை அணி திட்டமிடப்பட்ட அனைத்துப் போட்டிகளையும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: சச்சின் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.