ETV Bharat / sports

பும்ராவிற்கு காயம் உமேஷ் யாதவுக்கு யோகம்! - பும்ராவிற்கு காயம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற பும்ரா காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் தேர்வாகியுள்ளார்.

jasprit bumrah
author img

By

Published : Sep 24, 2019, 8:18 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்ததையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பந்துவீச்சாளர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று பந்துவீச்சாளராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா இதுவரை 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுமுனையில், உமேஷ் யாதவ் 2018இல் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இறுதியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் இதுவரை 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, அனுமா விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மன் கில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.