ETV Bharat / sports

NZ vs Pak : பாபர் அசாம் விலகல், முகமது ரிஸ்வான் கேப்டன்! - நியூசிலாந்து vs பாகிஸ்தான்

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இமாம் உல் ஹக் விலகியுள்ளனர்.

Injured Babar Azam, Imam-ul-Haq ruled out of first Test against NZ

author img

By

Published : Dec 21, 2020, 2:58 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், நாளை இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 26ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

பாபர் அசாம், இமாம் உல் ஹக் விலகல்

இதில் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கிற்கு பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

முகமது ரிஸ்வான் கேப்டன்

இதையடுத்து நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் 33ஆவது கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

  • JUST IN: Pakistan have named their squad for the Test series against New Zealand, which begins on 26 December 🏏

    Babar Azam and Imam-ul-Haq have been ruled out of first Test. Mohammad Rizwan will be the captain.

    24-year-old Imran Butt has got his maiden call-up!#NZvPAK pic.twitter.com/rkPtEPm79Y

    — ICC (@ICC) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதல் டெஸ்டுகான பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (முதல் டெஸ்ட் கேப்டன்), அபித் அலி, அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், ஹரிஸ் சோஹைல், இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான்.

இதையும் படிங்க:மெஸ்ஸியை பாராட்டிய பீலே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.