ETV Bharat / sports

டாப் ஆர்டரிடம் சீறிய இந்திய பவுலர்கள் டெய்லண்டர்களிடம் சொதப்பல்! - Team india

புனே: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களை எடுத்தது.

இந்திய
author img

By

Published : Oct 13, 2019, 2:52 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களோடு எடுத்திருந்த நிலையில், இன்று ஆட்டம் தொடரப்பட்டது.

டி ப்ரூயின் - அன்ரிட் நார்டே ஆகியோர் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதில் அன்ர்சி நார்டே 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தன்னைத் தொடர்ந்து ரி ப்ரூயின் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் அனுபவ பேட்ஸ்மேன்களான டூ ப்ளஸிஸ் - டி காக் இணை இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டது.

இந்திய அணி
இந்திய அணி

இந்த இணை 6ஆவது விக்கெட்டிற்கு 75 ரன்களைச் சேர்க்க, அஸ்வின் வீசிய பந்தை சரியாகக் கணிக்காமல் டி காக் 31 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த முத்துசாமி 7 ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் ஒற்றை ஆளாக தென் ஆப்பிரிக்க அணியை மீட்கப் போராடினார்.

அதையடுத்து டூ ப்ளஸியுடன் ஜோடி சேர்ந்த ஆல்- ரவுண்டர் பில்லண்டர் இந்திய பந்துவீச்சை சிறப்பாக கையாள, மறுமுனையில் கேப்டன் டூ ப்ளஸில் அரைசதம் கடந்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டெய்லண்டர்களை எளிதாக விக்கெட் வீழ்த்திவிடலாம் என நினைத்த இந்திய அணிக்கு, பில்லண்டர் - மகராஜ் இணை பதிலடி கொடுத்தது.

அரைசதம் கடந்த மகராஜ்
அரைசதம் கடந்த மகராஜ்

கிட்டதட்ட இவர்கள் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 162இல் இருந்து 271ஆக உயர்த்தினர். இதில் மகராஜ் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த இணை சேர்ந்து 109 ரன்கள் சேர்த்த நிலையில், மகராஜ் 72 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரபாடா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய பில்லண்டர் 44 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட் வீழ்த்திய அஸ்வின்
விக்கெட் வீழ்த்திய அஸ்வின்

நான்காம் நாள் ஆட்டம் நாளை விளையாடவுள்ள நிலையில், இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுக்குமா அல்லது பேட்டிங் களமிறங்குமா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். மேலும் டாப் - ஆர்டர் வீரர்களை விரைவாக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள், டெய்லண்டர்களிடம் சொதப்பியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: சச்சினின் மற்றொரு சாதனையும் காலி... கிங் கோலியின் வேற லெவல் பேட்டிங்!

Intro:Body:

sports santhiya

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.