ETV Bharat / sports

INDvSA: மூன்று போட்டிகளிலும் சொதப்பிய தென் ஆப்பிரிக்காவின் ஓப்பனிங்... பேட்டிங் பரிதாபங்கள்😒 - ரோகித் சர்மா இரட்டை சதம்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீரான ஓப்பனிங் இணை இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

INDVSA
author img

By

Published : Oct 20, 2019, 5:48 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியதால், இப்போட்டியில் நான்கு அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது.

ஏய்டன் மார்க்ரம், டி புரூயின், சீனுராம் முத்துசாமி, வெர்னான் ஃபிலெண்டர் ஆகியோருக்குப் பதிலாக சுபாயிர் ஹம்சா, ஹென்ரிச் கிளாசன், ஜார்ஜ் லின்டே, லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டனர்.

INDVSA
ரோகித் சர்மா - ரஹானே

டாஸ் வென்று இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 116. 3 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212, ரஹானே 115 ரன்கள் அடித்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ஜார்ஜ் லின்டே நான்கு, ரபாடா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் இந்தத் தொடரில் டீன் எல்கர் - ஏய்டன் மார்க்ரம் ஜோடியின் ஓப்பனிங் செட் ஆகவே இல்லை. இதனால், அந்த அணி டி-காக் - டீன் எல்கர் ஜோடியை தொடக்க வீரர்களாக களமிறக்கியது. இருவரும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததால், அணிக்கு அதிகமான ரன்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

INDVSA
டீன் எல்கர் - டி காக்

ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே டீன் எல்கர் முகமது ஷமியின் பந்துவீச்சில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, டி- காக்கும் நான்கு ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஏய்டன் மார்க்ரம் - டீன் எல்கர் ஜோடி செட் ஆகவில்லை என்றுப் பார்த்தால், டி- காக் - டீன் எல்கார் இணையின் ஓப்பனிங் அதைவிடவும் மோசமாக அமைந்துள்ளது.

INDVSA
டக் அவுட்டான டீன் எல்கர்

தென் ஆப்பிரிக்க அணியின் ஓப்பனிங் ஜோடிகள் இந்தத் தொடரில் முதல் விக்கெட்டுக்கு மொத்தம் 24 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஓப்பனிங் பங்களிப்பு: ( ஏய்டன் மார்க்கரம் - டீன் எல்கர், டி-காக் - டீன் எல்கர்)

  1. முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் - 14 ரன்கள்
  2. முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் - நான்கு ரன்கள்
  3. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் - இரண்டு ரன்கள்
  4. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் - பூஜ்ஜியம்
  5. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் - நான்கு ரன்கள்

பொதுவாக, மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருக்கும். அதுபோல தென் ஆப்பிரிக்க அணி எத்தனை மாற்றங்களை கொண்டுவந்தாலும், அவர்களது சொதப்பல் மாறாமல் இருக்கிறது.

Intro:Body:

INDVSA stumps

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.